அனுமதியின்றி சி.ஏ.ஏக்கு எதிராக போராடினால் அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியின்றி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது CAAக்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது.
சாலையை மறித்து நடைபெறும் இந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று வாதிடப்பட்டது.அப்போது அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்துவிட்டால் காவல்துறை பணி முடிந்ததா ? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனுமதி இல்லாமல் போராடினால் அவர்களை அப்புறப்படுத்தி , கைது செய்யுங்கள் என்றும் காவல்துறை டிஜிபி க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.