ஹீத்ரோ விமான நிலையத்தில் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த 56 வயது கருப்பின ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாக சக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா விதிமுறைகள் தற்போது நடைமுறையில் இருப்பதால் வருமானம் இல்லாமல் திண்டாடி வரும் டாக்சி ஓட்டுநர்கள் விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் சில நாட்களாகவே சர்வதேச பயணிகள் வருவதும் குறைந்துவிட்டது.
எனவே தங்களின் வாழ்வாதாரம் பாதித்திருப்பதாக டாக்ஸி ஓட்டுநர்கள் கூறியுள்ளனர். எனவே லண்டனின் விமான நிலையத்திற்கு வெளியில் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களுக்கான வாய்ப்பிற்காக 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளனர். வரிசையில் நின்று விட்டு பாதியில் வெளியேறிவிட்டால் மேலும் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். எனவே வரிசையை விட்டு யாரும் நகராமல் நின்றுள்ளனர்.
தற்போது உயிரிழந்த அந்த ஓட்டுநர் இரவு நேரங்களில் தன் வாகனத்திலேயே இருப்பாராம். மேலும் அவருக்கு நிதி நெருக்கடி அதிகமாக இருந்ததால் அவர் சாப்பிடாமல் இருந்ததாக தெரிவிக்கின்றனர். தற்போது காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.