கல்யாணவீட்டு கோஸ் பொரியல்
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – 1/2 கிலோ
பல்லாரி – 1
மிளகாய் – 3
கடுகு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
சீரகம் – 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் நறுக்கிய கோஸ் , பாசிப்பருப்பு மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவேண்டும் .பின் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , வெங்காயம் , மிளகாய் , கறிவேப்பிலை , பூண்டு சேர்த்து வதக்கி பின் கோஸ் , தேவையான உப்பு , தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான கல்யாணவீட்டு கோஸ் பொரியல் தயார் !!!