கோஸ் வறுவல்
தேவையான பொருட்கள் :
நறுக்கிய கோஸ் – 2 கப்
கடலை மாவு – 3 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை கோஸ் , கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை பகோடா போல உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான கோஸ் வறுவல் தயார் !!!