Categories
உலக செய்திகள்

4900 அடி உயரத்திலிருந்து விழுந்த கேபிள் கார்.. பயங்கர விபத்தில் 14 பேர் பலி.. மருத்துவர் இறுதியாக அனுப்பிய குறுந்தகவல்..!!

இத்தாலியில் கேபிள் கார் ஒன்று மலை உச்சியிலிருந்து அறுந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் உள்ள Maggiore ஏரியின் கரையிலிருக்கும் Stresa விலிருந்து Mottarone என்ற மலை உச்சிக்கு கேபிள் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது 4900 அடி உயரத்திலிருந்து அந்த கேபிள் அறுந்ததில் கார் மரங்களின் மேல் மோதி விழுந்திருக்கிறது. இதில் Roberta Pistolato என்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவரின் காதலர் Angelo Gasparro என்பவருடன்  பிறந்தநாளை கொண்டாட சென்றபோது இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்து நேர்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவரின் சகோதரிக்கு, கேபிள் காரில் ஏறி விட்டோம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இதேபோல திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடி Silvia Malnati மற்றும் Alessandro Merlo ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.

மேலும் இத்தாலியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களும் இக்கொடூர விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் ஒரு சிறுவன் படுகாயங்களுடன் விமானத்தில் மருத்துவமனைக்கு கொண்டு கொண்டிருந்த போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

Categories

Tech |