Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பொழிவை அதிகரிக்கும் கற்றாழை ஜெல்…. வீட்டிலே எளிமையாக தயாரிக்கலாம்!

சருமத்திற்கு மிகச் சிறந்த பொலிவை தருவதில் கற்றாழைக்கு நிகர் வேறேதும் இல்லை என்றே கூறலாம். கற்றாழை சருமத்தில் உள்ள கரும்புள்ளி, அலர்ஜி போன்றவற்றையும், முகப்பரு, தழும்புகளையும் போக்கும் தண்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எளிமையாக வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள் :

கற்றாழை இலை – 4,
விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 5,
விட்டமின் சி கேப்ஸ்யூல் – 4.

செய்முறை

  • முதலில் கற்றாழை இலையை இரண்டாக பிரித்தெடுத்து அதிலிருக்கும் மஞ்சள் நிறம் போகும் வரை கழுவ வேண்டும். அதன் பின் ஒரு பீலர் கொண்டு தோலை உரித்துக் கொள்ளுகள்.
  • அதற்கு பிறகு ஒரு ஸ்பூன் கொண்டு வழவழப்பாக இருக்கும் ஜெல்லை தனியாக எடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையான கெல்லை எடுத்து கொள்ளுங்கள். ஒரு இலையிலிருந்து அரை கப் ஜெல்லை எடுக்கலாம்.
  • பின்னர் இந்த ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுள் விட்டமின் ஈ மற்றும் சி கேப்ஸ்யூலிருந்து எண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். வேண்டும். அதன் பின் அதனை உபயோகிக்க ஆரம்பிக்கலாம்.
  • பயன்படுத்திய பின்னர் தொடர்ந்து ஃப்ரிஜில் வைத்திருந்தால் இது கெட்டுப் போகாமல் இருக்கும். இதனை சருமம் மற்றும் கூந்தலுக்கு தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் எந்த விதமான கெமிக்கல்களை கலக்காததால் பக்கவிளைவுகள் ஏற்படாது.

Categories

Tech |