துல்கர் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்
சமீபத்தில் துல்கர் மற்றும் ரித்து வர்மா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இத்திரைப்படத்தில் துல்கருக்கு நண்பராக ரக்ஷன் நடித்துள்ளார். காவல் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் திரைப்படக் குழுவினர் நேற்று கமலா திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடி திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையும் தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இரண்டாம் பாகத்தை கூடிய விரைவில் எடுக்குமாறு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் கூறியுள்ளார்.