கியூபா நாட்டில் பாபா வங்கா (81) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இயற்பெயர் வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு 12 வயது இருக்கும் போது புயலில் சிக்கிக் கொண்டதால் கண் பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகுதான் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் வந்ததாக பாபா வங்கா கூறுகிறார். இவருடைய வருங்காலம் பற்றிய கணிப்புகளில் 90 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள். அதில் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற்றம் போன்றவற்றை கூறலாம். இவர் 5079-ம் ஆண்டு வரை என்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார்.
அதாவது 5079-ம் ஆண்டில் மொத்த உலகமும் அழிந்து விடும் என்று பாபா வங்கா கூறியுள்ளார். இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அதிக அளவில் வெட்டுக்கிளி தாக்குதல் நடைபெறும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இதனால் நாட்டில் கடுமையான பஞ்சம் மற்றும் பற்றாக்குறை ஏற்படுமாம். இதேபோன்று இனி வருகிற ஆண்டுகளில் நடக்கும் சில ஆச்சரியமூட்டும் கணிப்புகளையும் பாபா வங்கா கூறியுள்ளார். அதாவது 2028-ம் ஆண்டு பொதுமக்கள் வீனஸ் கிரகத்திற்கு செல்வார்கள் என்றும், 2046-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் அனைவரும் 100 வருடங்களுக்கு மேல் வாழ்வார்கள் என்றும், 2100-ம் ஆண்டுக்குப் பிறகு செயற்கை சூரியன் உருவாக்கப்பட்டு இரவே இருக்காது என்றும் கூறியுள்ளார்.