விவசாயி ஒருவரின் வீட்டில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்று குட்டியை பார்ப்பதற்காக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20- க்கும் அதிகமான மாடுகளை வளர்த்து வருவது மட்டும் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்தக் கன்றுக்கு கால்கள் கிடையாது. இதனால் அந்தக் கன்று தவழ்ந்து தவழ்ந்து அங்க இங்கேன்னு செல்கிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் திகைத்துப்போய் கன்றை பார்த்துள்ளார். அதன் பின் தாய் பசுவிடம் இருந்து பால் எடுத்து அதை பாட்டிலில் அடைத்து கன்றுக்கு ஊட்டியுள்ளார். இதனையடுத்து பசுமாடு ஈன்ற கன்றுக்கு கால்கள் இல்லாதது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கால் இல்லாமல் பிறந்த கன்று குட்டியை பார்ப்பதற்காக அப்பகுதியில் வசிப்பவர்கள் அங்கே திரண்டு வந்துள்ளனர்.