இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரமணாவை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் ஆளுநராக இருக்கும் எலெனி கவுனாலாகிஸ், சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி ரமணாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருக்கு பரிசாக நீதிபதி ரமணா, மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை அளித்துள்ளார்.
அதற்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டமைப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற நீதிபதி ரமணா பேசியதாவது, இந்தியாவும் அமெரிக்காவும் பன்முக தன்மையுடைய நாடுகள். உலக மக்கள் அனைவரும் அதனை மதிக்க வேண்டும்.
அமெரிக்கா, பன்முக தன்மையை அங்கீகரித்து அதற்கு மதிப்பளிக்கிறது. இதனால் தான் நீங்கள் அனைவரும் இங்கு வந்து அசாத்தியமான திறமைகள் மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் சாதனை படைத்திருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.