அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் தீவிரமாக பரவிய காட்டுத்தீயால் 12க்கும் அதிகமான வீடுகள் சாம்பலாகியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம், தீவிரமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி அன்று காட்டு தீ பரவ ஆரம்பித்து, இந்தியன் பால்ஸ் முற்றிலுமாக பரவியுள்ளது. இதில் 12க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், பட் மற்றும் ப்ளூமாஸ் போன்ற பகுதிகளில் 1,81,000-த்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் தீயில் சேதமடைந்ததாக கூறியுள்ளனர். வெகு தூரத்திலும் தீ பரவியுள்ளது. எனினும் அதனை கட்டுப்படுத்த தேவையான வசதிகள் இல்லை என்று அலுவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் கிழக்கு திசையில் தீ பரவியதால் தீயணைப்பு படையினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் 85 இடங்களில் காட்டுத்தீ பரவியதால், 1.4 மில்லியன் ஏக்கர் நிலங்கள் நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.