Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா, அக்கா என கூப்பிடுவாங்க..! வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக இல்ல… டெய்சி கருத்து

பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு,  பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல  அம்மா,  அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக இல்ல.

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்தது அப்படிங்கறதனால,  நிறைய எதிர்க்கட்சிகள் எல்லாம் வெறும் வாயில அவல், லட்டு கிடைச்ச மாதிரி இன்னைக்கு  நிறைய ட்ரோல் எல்லாம் பண்ணிட்டு வராங்க.  இதுல சம்பந்தப்பட்ட நாங்களே… கட்சியில் இருக்கிற பெரியவர்கள்….  குறிப்பாக கனகசபாபதி ஐயா,  எங்க ரெண்டு பேரையும் பேச வச்சாங்க. நிறைய விஷயங்களை சொல்லி,  நாங்கள் எங்களுக்குள்ள சொல்லி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசி இந்த விஷயத்தை விட்டுவிடலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு முடிவுக்கு வந்துட்டோம்.

இது யாருடைய வற்புறுத்தலும் இல்ல. நாங்க நிச்சயமா இந்த கட்சியை விட்டுக்கொடுப்பதாகவோ, ஏதோ ஒரு சின்ன அசம்பாவிதம் இப்படி நடந்துடுச்சி. நம்முடைய பிரதமர் மோடியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு,   என்னை பொறுத்தவரை, என்னுடைய இறப்புக்கு முன்பாக இப்படி ஒரு பிரதமரை இந்த இந்தியா பாக்குமோ,  அப்படின்னு எங்கிகிட்டு  இருந்த போது, இப்படி ஒரு பிரதமர் இந்தியாவை இந்த அளவு  வளர்ச்சிக்கு கொண்டு போயி,  நம்ம ஜிடிபியை உயர்த்தி உள்ளாங்க. அப்படி ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் ஏற்கப்பட்டு வந்தவுங்க. ஏதோ ஒரு கண் பட்ட மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது.

உணர்ச்சிவசப்பட்டு எப்படியோ நடந்தது. இது நாங்க ரெண்டு பேரும் எங்களுக்குள்ள பேசிக்கிட்டோம். இதுல மனமுவந்து அவர் தம்பி மாதிரி, உண்மையாவே ஆரம்பத்திலேயே அக்கான்னு தான் கூப்பிட்டார். நானும் தம்பின்னு தான் பேசிட்டு இருந்தேன். திரும்ப அந்த மாதிரியே நாங்க திரும்ப தொடர்ந்து பயணிப்பதாக முடிவு செய்துள்ளோம். அதனால ஊடகங்கள் இந்த விஷயத்தை நிச்சயமாக பெருசு பண்ண வேண்டாம்,  அப்படிங்கறது என்னுடைய தாழ்மையான கருத்து என தெரிவித்தார்.

Categories

Tech |