TVS நிறுவனம்t TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு சந்தையில் களம் இறக்கியுள்ளது .
இந்தியாவில பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு மிக பெரும் பிரச்சனையாக உள்ளது . இதனால் மக்கள் பார்வை மின்சார வாகனகள் பக்கம் திரும்பியுள்ளது . வாகன உற்பத்தி நிறுவனகள் மின்சார வாகனகள் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. BAJAJ , HERO ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உருவாக்கிவருகிறது . இதனை தொடர்ந்து TVS நிறுவனமும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
வடிவமைப்பு:
TVS iQube LED திறன் கொண்ட ஒளிரும் விளக்குகள் முன்புறமும் , பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் விளக்குகள் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது .
செயலி:
TVS iQube மின்சார ஸ்கூட்டரில் DFT திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது . மேலும் பிரத்யேகமான செயலி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது . இந்த செயலி வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் இணைத்து கொண்டு செல்போன் மூலம் ஸ்கூட்டரை கட்டுப்படுத்தலாம் .
LED DISPLAY-ன் வசதிகள்:
ஸ்கூட்டரில் உள்ள LED DISPLAY-யில் ஸ்கூட்டரில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது , எவ்வளவு தூரம் செல்லும் ,எவ்வளவு மணி நேரம் வாகனம் இயங்கும் மற்றும் வாகனத்துடன் இணைக்கப்பட்ட செல்போனில் எவ்வளவு call மற்றும் message வந்துள்ளது என்பதை காணலாம் .
பேட்டரி ரேஞ்ச்:
ECO மற்றும் POWER என இரண்டு DRAIVING MODE இந்த ஸ்கூட்டரில் உள்ளன. ECO MODE என்பது 40கி .மீ வேகத்தில் செல்லும்போது வாகனம் இருக்கும் . POWER MODE என்பது 75கி .மீ வேகத்தில் செல்லும்போது வாகனம் இருக்கும்
பாதுகாப்பு வசதி:
TVS iQube ஸ்கூட்டரில் உள்ள பார்க் அசிஸ்ட் வாகனம் முன்னோக்கி செல்வதை நிறுத்துவது மட்டும் இன்றி வாகனத்தை பின்புறம் ரிவேர்ஸ் எடுக்கவும் உதவுகிறது . இது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
பிரேக் அமைப்பு:
ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் டூயல் ஷாக் அபஸ்பர்கள் சஸ்பென்ஷன் இருப்பதால் மேடுபள்ளங்களில் இலகுவாக செல்லமுடிகிறது . அதனுடைய, முன்சக்கரத்திலும் பின்புறத்திலும் டிஸ்கப்ராய்ட் இடம்பெற்றுள்ளன. இதன் அலாய் சக்கரங்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில்அமைந்துள்ளது .
செயல்திறன்:
2.25kWh லித்தயம் அயன் பேட்டரி மற்றும் 4.4W எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது . இது 140 N.M.DARK திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். வீட்டிலுள்ள 5ஏ சார்ஜர் ஐ-கியூப் ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 7 மணிநேரமாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 75 கி.மீ வரை செல்லும். துவக்க நிலையில் இருந்து 40 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த ஸ்கூட்டர், மணிக்கு 78 கி.மீ வேகத்தில் செல்லும்.
விலை:
முதன்முதலாக கடந்த சனிக்கிழமை விற்பனைக்கு வந்த TVS iQube ஸ்கூட்டர் பெங்களூருவில் களமிறக்க பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூபாய் 5 ஆயிரம் மட்டும் முன்பணம் செலுத்தி, TVS iQube ஸ்கூட்டரை பெற்றுக்கொள்ளலாம். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.