வெளிநாடுகளில் உள்ள 50,000 தமிழர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தமிழகம் வருவதற்கு விண்ணப்பிப்பிக்கும் வகையில், ஒரு இணைய பக்கத்தை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த இணைய பக்கத்தில் தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா திரும்புவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக நாளை மறுதினம் மலேசியாவில் இருந்து விமானம் மூலமாக 200 பேர் தமிழகம் அழைத்து வரப்படுகிறார். இதற்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் அழைத்து வரப்படும் இவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கொரோனா உறுதியானால் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று 14 நாட்கள் தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதற்கான கட்டணத்தை, வெளிநாடுகளின் இருந்து அழைத்து வரப்படுவதற்கான கட்டணத்தையும் அவர்களே ஏற்கவேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50,000 பேர் தமிழகம் திரும்ப விண்ணப்பித்துள்ளார். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.