Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பிஜேபி -யை தவிர அனைவருக்கும் அழைப்பு  – வைகோ மகன் பேட்டியால் அண்ணாமலை, எடப்பாடி ஷாக் ..!!

செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆவணப்படம் வெளியிட இருக்கின்றோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து நண்பர்களும்,  இயக்கத் தோழர்களும் அதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் நாங்கள் அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற எல்லா இயக்கத்திற்கும் இந்த அழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலைப் பொருத்தவரை முன்னாடி மாதிரி கிடையாது.

சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, இன்றைக்கு வேரூன்ற முயற்சியில் இயங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் தான் நாம் திமுக தலைமையிலான கூட்டணி அங்கம் வகிக்கின்றோம். நாங்கள் அந்த கூட்டணியில் செயல்படுவதும் சரி, அதே நேரத்தில் திராவிட இயக்க கொள்கைகளை தமிழ்நாடு முழுவதும் அதை பரப்புகின்ற முயற்சியிலும் சரி, இந்த நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் நாங்கள் அதிமுக – பாஜகவுக்கு அழைப்பு கொடுக்கவில்லை.

நாங்கள் பாஜக, அதிமுகவை வேறுபடுத்தி பார்க்கவில்லை, இரண்டையும் ஒன்றாக தான் பார்க்கிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர்களாகவே இருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்வை பொருத்தவரை இந்த சூழ்நிலையில் அவர்கள் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து இருப்பதினால் நாங்கள் அதை வித்தியாசமாக பார்க்கவில்லை இரண்டையும் ஒன்றாக தான் பார்க்கிறோம். விஜயகாந்த் இல்லத்திற்கு வந்து, ஆவணப்படத்திற்கான அழைப்பிதழ் கொடுத்ததும் மரியாதை நிமித்தமாக ஒரு சந்திப்பு. இதில் அரசியல் வேண்டாம் என தெரிவித்தார்.

Categories

Tech |