மும்பை ஹைகோர்ட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்தப் பெண் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்தப் பெண்மணிக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருந்த நிலையில், அதை எதிர்த்து அப்பெண்மனி ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று கூறினார். மேலும் எவ்வித ஆதாரமும் இன்றி கணவரை பெண்கள் பின்னால் சுற்றுபவர் மற்றும் குடிகாரர் என்று சொல்லுவது மிகவும் கொடூரத்தனமான செயல் என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.