Categories
உலக செய்திகள்

வழுக்கை தலை ஆண்களை கிண்டலடிப்பது…. பாலியல் குற்றம்…. இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவிப்பு…!!!

வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களை பணியிடங்களில் கேலி செய்தால் அது பாலியல் குற்றமாகக் கருதப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள மேற்கு யார்க்ஷயர் நகரத்தின் ஒரு தனியார் நிறுவனத்தில் 24 வருடங்களாக பணியாற்றி வந்த டோனி பின் என்ற நபர் கடந்த வருடம் மே மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அவர் நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் நிறுவனத்தில் இருக்கும் உயரதிகாரி என்னை வழுக்கை என்று கேலி செய்தார். அதை நான் எதிர்த்ததால் நியாயமில்லாமல் என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணிபுரியும் இடங்களில் பெண்களது உறுப்புகளை கிண்டல் செய்வது பாலியல் குற்றம். அதைப்போன்றே ஆண்களின் வழுக்கையை கிண்டல் செய்வதும் பாலியல் குற்றத்தில் சேரும். எனவே அந்த நபருக்கு உரிய நிறுவனம் தகுந்த இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

Categories

Tech |