இருசக்கர வாகனத்தில் இருந்து விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக பிடித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மகன் வேலை நிமிர்த்தமாக கரூர் நகர கடைவீதி, காமராஜர் சிலை பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தில் ஏதோ நெளிவது போல் இருந்தது. வண்டியிலிருந்து இறங்கி தன் வாகனத்தில் சோதனை செய்த போது ஒரு பாம்பு சுற்றி இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் தீயணைப்பு வீரர் தகவல் கொடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில் கொம்பேறிமூக்கன் என்ற கொடிய விஷப்பாம்பு அந்த வாகனத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர் அந்த பாம்பை சாமர்த்தியமாக பிடித்து சென்றனர்.