வலிமை படத்தில் அஜீத் செய்த புதிய முயற்சியின் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கும் இப்படத்தினை போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து வரும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் அஜித் இப்படத்தில் கையாண்டுள்ள புதிய முயற்சியின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜித் இப்படத்தில் முதல் முறையாக பஸ் ஒன்றை ஓட்டி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிலும் ஒரு சேசிங் காட்சியில் அஜித் பஸ் ஓட்டியுள்ளார். ஆகையால் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாஸான காட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது போன்ற மாஸான வலிமைக்கு படத்தின் காட்சிகளை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.