சென்னையில் வீட்டில் தனிமைபடுத்தப்படும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் பல்வேறு முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சென்னையில் வீட்டில் தனிமைப் படுத்தப் படுவது அல்லது கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுவது ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் தடையை மீறி, பாதுகாப்பு இல்லாமல் வெளியே அதிகமான பலர் வெளியே தொடர்ச்சியாக வருகிறது.
சுமார் 80 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, அரசின் நடைமுறையை பின்பற்றினால் கூட 20 சதவீதம் பேர் வெளியே அதிகமாக சுற்றி வருகிறார்கள். அந்த 20 சதவீதம் பேரால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது வீட்டில் தனிமை படுத்துவதற்கான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உடையவர்கள் வீட்டில் வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் மொத்த குடும்ப உறுப்பினரும் முகாமுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.