இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற நிலையில்,
தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பான விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகின்றது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேச வாய்ப்பு உள்ளது. தேர்தலை கூட்டணியோடு சந்திக்கலாமா ? பாஜகவோடு கூட்டணி இல்லாமல் இருக்கலாமா ? போன்ற பல விஷயங்கள் பேசப்பட இருக்கின்றன.
கடந்த வாரம் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றது. அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஓபிஎஸ் வெளிப்படையாக பேசி இருந்தார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அதிமுக தொடர்பான வழக்கு ஜனவரி 4ஆம் தேதி வர இருக்கின்றது என்பது ஆலோசிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் ஜனவரி 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெறுவதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்ற கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் அளித்த கடிதம் தற்போது வரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். கட்சி கொடி, பெயரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என அதில் சொல்லி இருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ்-ம் நேற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் ஆதரவு என்னிடம் தான் இருக்கிறது எனவே கட்சி கொடியை, பெயரை பயன்படுத்துவதற்கு எனக்கு உரிமை இருக்கின்றது என பதில் கொடுத்து இருந்தார். அதேபோல தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சக்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரும்பு, வெள்ளம் கொடுக்கவில்லை. இது பற்றி எல்லாம் பேச வாய்ப்பு இருக்கின்றது.