Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய தகவல்.!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது, “கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு, எந்த  ஒரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  தங்கள் முகங்களை மறைக்க வேண்டும். நோய்வாய்பட்டவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் முகங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

Coronavirus, India Violence, South Carolina Primary: Your Monday ...

இது தொடர்பாக அமெரிக்க சுகாதார நிறுவனங்கள் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கிய பாதை சுவாச துளிகள். நோய்வாய்ப்பட்ட மக்களால் தும்மும்போது அல்லது இருமும்போது அவரின் சுவாசத்தின் மூலமும் பரவக்கூடும். இது தொடர்பான ஆராய்ச்சி இன்னும் முடிவாக இல்லை என்றாலும் கிடைத்துள்ள ஆய்வுகளின் முடிவுகள் சாதாரண சுவாசத்திலிருந்து கொரோனா வைரஸின் பரவுவதோடு ஒத்துப்போகின்றது எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட என்ஐஎச் நிதியுதவி ஆய்வு அறிக்கையில்  சார்ஸ் , கோவ் -2  வைரஸ் தூசுப்படலமாக மாறி 3 மணி நேரம் வரை காற்றில் இருக்கும் என்று சொல்லப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது “கொரோனா வைரஸானது காற்று மற்றும் தொடுவதன் மூலம் பரவுகிறது என்பதற்கு, எந்த  ஒரு ஆதாரமும் இல்லை” என்றுக் கூறியுள்ளது.

Categories

Tech |