Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சீத்தாப்பழத்தை ”இதய,சர்க்கரை நோயாளிகள்” சாப்பிடக்கூடாதா.!! இதை படிங்க…

தற்போதைய சீசன் பழமாக சீத்தாபழம் இருந்து வருகின்றது.இது ஒரு சுவை மிக்க பழம் மட்டுமின்றி நம்முடைய தோல், முடி, கண்பார்வை, மூளை மற்றும் ஹீமோகுளோபின் அளவிற்கு சிறந்தது . சீத்தா பழத்தைப் பற்றிய பரப்பப்படும் பொதுவான கட்டுக்கதைகளை பற்றியும், அதனை நாம் ஏன் நம்பக்கூடாது என்பது பற்றியும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சீத்தாபழம் ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன. தற்போது நிகழும் சீசன் சீத்தாபழ சீசன் என்பதால், உங்கள் உணவின் ஒரு பகுதியாக சீத்தாபழத்தை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Related image

நம்முடைய உணவில் சீத்தாபழம் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறியுள்ளார். சமீபத்திய அவர் வெளியிட்டுள்ள போஸ்ட் ஒன்றில், சீத்தாபழம் பற்றிய சில கட்டுக்கதைகளைப் பற்றியும், அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான மற்றும் பருவகால சீத்தாபழம் பற்றி ருஜுதா என்ன கூறுகிறார் என்பதை இங்கு அறிந்துகொள்ளுங்கள்.

சீத்தாபழம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுக்கதைகளும் அதன் உண்மைகளும்.

1. நீரிழிவு நோயாளிகள் சீத்தாபழத்தை சாபிடாதீங்க  :

Image result for நீரிழிவு நோய்

54-இன் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழமாக சீத்தாபழம் திகழ்கின்றது. இது நீரிழிவால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான பழமாகும். அதுமட்டுமல்லாமல், GI 55 மற்றும் அதற்குக் குறைவான உணவுகள் தான் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் ருஜுதா தெரிவித்துள்ளார்.

2. இதய நோயாளிகள் சீதாபழதை புறக்கணியுங்கள் : 

இதய நோயாளிகளுக்கு சீத்தாபழம் உண்மையில் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற நன்மை பயக்கும் தாதுக்கள் இருக்கின்றன. உங்கள் உணவின் ஒரு பகுதியாக இந்த பழம் இருந்தால் ஆரோக்கியமான இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்புக்கு நல்லது.

3. சீதாபழம் உடல் செரிமானத்திற்கு நல்லது : 

Image result for உடல் செரிமானம்

அதிகமான உடல்  எடை கொண்டவர்கள் இந்த சீதாபழத்தை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுக்கதை இங்கு இருந்து வருகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால், சீதாபழம் செரிமானத்திற்கு நல்லது . இது உடலின் வீக்கத்தைக் குறைக்கும் என்றும் ருஜுதா தெரிவிக்கிறார். இதனால் சீத்தாப்பழத்தல் அமிலத்தன்மையைத் தடுக்கவும், புண்களைக் குணப்படுத்தவும் முடியும். இதில் உள்ள வைட்டமின் பி complex-ன் நல்ல மூலமாகும்.

4.PCOD உள்ள பெண்களுக்கு  சீத்தாபழம் வேண்டாம் : 

இது சீத்தாபழத்தைப் பற்றிய பரப்பப்படும் மற்றொரு பிரபலமான கட்டுக்கதை. இரும்புச்சத்துக்கான நல்ல மூலம் சீத்தாபழம் என்பதால் இதை பி.சி.ஓ.டி உள்ள பெண்கள் சாப்பிடலாம் என்று ருஜுதா தெரிவித்துள்ளார். இது பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தி , சோர்வு உணர்த்தி , எரிச்சலைக் குறைக்கும் தன்மை கொண்டது.இதனால் அனைத்து வயதினரும் சீத்தாப்பழத்தை எந்த பயமுமின்றி உண்ணலாம்.

மேலும் உடல் சருமத்தின் நிறம் (tone), கண்பார்வை, முடியின் தரம், மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை சீத்தாப்பழம் மேம்படுத்தும். இது anti-obesogenic, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்ட உயர் பயோஆக்டிவ் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் சீத்தாப்பழத்தை உங்கள் கைகளால் சாப்பிடுங்கள் என்று ருஜுதா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |