மீன் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது. ஒரு சிலருக்கு மீன் பிடிக்கும் ஒரு சிலருக்கு மீன் பிடிக்காது. மீனில் புரதம், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.நிறைய பேருக்கு மீன் அடிக்கடி சாப்பிடலாமா? என்று சந்தேகம் எழுகின்றது. இது குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மீனில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது. எனவே தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் மீன் சாப்பிடுவதன் மூலம் இதயதிற்கு ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவது இதயத்திற்கும் இதமாக இருக்கும்.
விட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். எனவே மீன் சாப்பிடுவதன் மூலம் விட்டமின் டி சத்து தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மன அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம்.
மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கிறது.
தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் இதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.