மீல்மேக்கர் சாப்ப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் இறைச்சி இல்லாமல் ஒரு வேளை சாப்பாடு சாப்பிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது. அதுவும அசைவ பிரியர்களுக்கு சைவ உணவுகளை சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும். மீன் ,கோழி, ஆடு, நண்டு, இறால் என அசைவ உணவுகள் அனைத்தையும் வரிசைகட்டி சாப்பிட்டு வருகின்றனர். என்னதான் அசைவ பிரியர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி போன்ற விசேஷ நாட்களில் அசைவ உணவேட்டு வைத்வை து சாப்பிட முடியாது. அப்போது மீல்மேக்கர் சாப்பிடலாம்.
மீல்மேக்கர் எண்ணெய் தயாரிக்கும்போது பிழிந்து எடுக்கப்படும் சக்கை தான். இதில் மிகுந்த புரதச்சத்து நிறைந்திருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு வரை திருமண விருந்துகளில் அதிகமாக பணக்கார உணவாக பரிமாறப்பட்ட மீல்மேக்கர் இன்று உள்ளூர் பெட்டிக்கடைகளில் கூட நாம் வாங்கிவிட முடியும். இதில் இறைச்சிக்கு இணையாக சுவை இருக்கிறது. ஆனாலும் இது சத்து நிறைந்ததா? என்று பலரும் சந்தேகிக்கின்றனர். நிச்சயம் இது மிகவும் சத்து நிறைந்தது தான்.
தானிய வகைகளில் சோயா பீன்ஸில் தான் அதிக புரதச்சத்து உள்ளது. மீல்மேக்கர் என்பது அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர். அதனால்தான் உலக அளவில் இந்த பெயர் மாறிவிட்டது. மீல்மேக்கர் உடலுக்கு நல்லதுதான் கொடுக்கும். இருப்பினும் அதையே அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு விந்தணு சுரக்கும் பிரச்சினை ஏற்படலாம். எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக எடுத்து நலமாக வாழுங்கள்.