வெஜிடேபிள் சூப் செய்வதற்கு நாம் வழக்கமாய் கான்பிளவர் மாவு தான் பயன்படுத்துகிறோம் அது இல்லாமல் நம் வீட்டில் கிடைக்கக்கூடிய சாப்பாடு வடித்த கஞ்சியில் சூப் செய்தால் உடலுக்கு ஆரோக்கியம் இந்த மாதிரி செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சாப்பாடு வடித்த கஞ்சி தண்ணீர் 2 கப்,
கேரட் 100 கிராம்,
பீன்ஸ் 100 கிராம்,
பச்சைப் பட்டாணி 50 கிராம்,
கோஸ் 100 கிராம்,
நெய் 2 ஸ்பூன்,
மிளகு தூள் இரண்டு ஸ்பூன்
தேவையான அளவு உப்பு,
கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நாம் நறுக்கி வைத்திருந்த வெஜிடபிள்ஸ் எல்லாம் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். இதனோடு பட்டாணியும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். காய்கறிகள் வெந்தவுடன் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கி அதனுடன் சாப்பாடு வடித்த கஞ்சி தண்ணீர் 2 கப் சேர்க்கவும். தண்ணீர் ஒரு டம்ளர் சேர்க்கவும். நல்லா 10 நிமிடங்கள் வேகவிடவும். கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு பெப்பர் 2 ஸ்பூன் போட்டு இறக்கி ருசித்துப்பாருங்கள். மிக அருமையான சாப்பாடு வடித்த வெஜிடபிள் சூப் தயார்.