Categories
மாநில செய்திகள்

மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா? மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மதியம் 2.30 மணிக்கு பதில் அளிக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணனுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.

Categories

Tech |