Categories
அரசியல்

” இரட்டை இலை சின்னத்திற்கு தடை விதிக்க முடியாது ” உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது . மேலும்  இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரி கூறப்பட்டு அந்த முறையீட்டில் கோரப்பட்டு இருந்தது .இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது .

 

அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக_விற்கு குக்கர்  சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் சார்பில் கூறப்பட்டது . ஆனால் அமுமக  ஒரு அணி தானே தவிர கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி அமமுக விற்கு பொது சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என்று தேர்தல் ஆணையம் கூறியதைக் கேட்ட நீதிபதிகள் அமமுக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியுமா முடியாதா என்பது குறித்து விளக்கம் வருகிற 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது . மேலும் இரட்டை இலை சின்னத்தை இதனிடையே இரட்டைக் இடையில் சேர்ந்ததை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவி_ற்கு  ஒதுக்கியதற்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது .

Categories

Tech |