Categories
மாநில செய்திகள்

“இவ்வளவு எடை, பிபி, சுகர் உள்ளவருக்கு சர்ஜரி செய்யலாமா”….? ஜெ. மரண அறிக்கையை சுய பரிசோதனை செய்ய சொன்ன ஆறுமுகசாமி…..!!

கோயம்புத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப் படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் நீதிபதி ஆறுமுகசாமி சிறப்பு கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்கள் பற்றி வழக்கறிஞர் களிடம் பேசினார். அதன் பிறகு நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னிடம் இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரண அறிக்கை தொடர்பாக கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில் இது மட்டும் தான். அதாவது ஜெயலலிதாவின் சராசரி உயரம் 5 அடி. வயது 68. சர்க்கரை அளவு 228 மில்லி கிராம். பிபி 160. கிரேடியன் 0.82. எடை 100 கிலோ.

இந்நிலையில் இவ்வளவு சுகர், எடை மற்றும் பிபி உள்ள ஒருவருக்கு சர்ஜரி செய்யலாமா என்பதுதான் முக்கியமான ஒரு விஷயம். நான் மேற்குறிப்பிட்ட விஷயங்களை முக்கிய கருத்தாக எடுத்துக் கொண்டு ஜெயலலிதாவுக்கு சர்ஜரி செய்யலாமா என்பதை நீங்கள் மருத்துவர்களிடம் கேளுங்கள். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்பதுதான் என்னுடைய ஒரே பதில். அதன்பிறகு நீங்கள் கம்ப்யூட்டரில் தேடி பார்த்துக் கூட விடையை கண்டுபிடிங்கள். இதன் முடிவை வைத்து நீங்கள் என்னுடைய அறிக்கையின் முடிவை சரி செய்து கொள்ளலாம் என்று கூறினார். மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |