Categories
தேசிய செய்திகள்

பிரசாரத்துக்கு வந்த தலைவரின் தங்கையிடம்……. தொண்டர்கள் இப்படி செய்யலாமா…?

YSR காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் YSR  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ‌ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

Image result for YSR காங்கிரஸ் கட்சி தலைவரின் சகோதரி ஷர்மிளா

இந்நிலையில் நேற்று குண்டூரில் YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ஷர்மிளா_வை கான ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது தொண்டர்களிடம் சென்ற ஷர்மிளா தொண்டர்களிடம்  கையசைத்தும் , கைகுலுக்கியும் வாக்கு சேகரித்தார்.

Image result for YSR காங்கிரஸ் கட்சி தலைவரின் சகோதரி ஷர்மிளா

ஷர்மிளா தொண்டர்களிடம் கை கொடுக்கும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஷர்மிளா விரலில் இருந்த மோதிரத்தை திருடினர். இதையடுத்து திருடு போன மோதிரத்தை கண்டு பிடிக்க  முடியாததால் ஷர்மிளா அங்கிருந்து கிளம்பினார்.  பிரசாரத்துக்கு வந்த YSR காங்கிரஸ் கட்சி தலைவரின் சகோதரி கையில் இருந்த மோதிரம் திருடு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |