விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கொண்டார். இவர் போட்டியாளர்களில் யங் அண்ட் பிட்டான சந்தோஷ் மீது தனக்கு ஒரு கண்ணு எனக் கூறி எல்லோரையும் அதிர வைத்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சந்தோஷ் பிரதாப் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது ரோஷினி அல்லது சுனிதா இருவரில் யாரையாவது திருமணம் செய்து கொள்ளக் கூறினால் நீங்கள் யாரை திருமணம் செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சந்தோஷ் நான் சுனிதாவை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். எனக்கு சுனிதா மிகவும் நல்ல தோழி. அவரை திருமணம் செய்து கொண்டால் என்னுடைய வாழ்க்கை அழகாக இருக்கும். எனவே வாழ்க்கை துணையாக சுனிதாவை தான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் நேரடியாகவே சந்தோஷ் சுனிதாவுக்கு ப்ரபோஸ் செய்து விட்டதாகவும் இனி சந்தோஷுக்கு சுனிதா சிக்னல் காட்டுவாரா என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும் சந்தோஷ் பிரதாப் நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்ததோடு தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.