Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால கேட்க முடியுமா…. மோடிக்கு துணிச்சல் இருக்குதா ? ஜோதிமணி காட்டம் …!!

இந்தியாவை அசுத்தமான நாடு என்ற அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி கண்டிப்பாரா என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க தேர்தல் வருவதையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஜோ பிடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவைப் பாருங்கள், அது இழிவானது. ரஷ்யா – இந்தியாவை பாருங்கள் அது அசுத்தமானது. நாம் நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள நம்பமுடியாத பல்வேறு பணிகளை செய்துள்ளோம் எனக் கூறினார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு இந்தியா தரப்பில் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்தான் டிரம்ப் கருத்துக்கு மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பற்றி கண்டுகொள்ளாமல், டிரம்ப்பின் வருகைக்காக மக்கள் வரிப் பணத்தை செலவிட்டு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால் அவரோ இந்தியா அசுத்தமான நாடு என சேற்றை வாரி இறைத்து இருக்கிறார். சீனாவின் பெயரை உச்சரிக்க அச்சம் கொள்ளும் பிரதமர் மோடி…. டிரம்ப்பின் கருத்தை கண்டிக்கும் துணிவு இருக்கிறதா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |