படப்பிடிப்பில் சுதந்திரமாக சுற்ற முடியவில்லை என்று தளபதி65 ஹீரோயின் கூறியுள்ளார்.
ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, அனைவரது வாழ்க்கையிலும் கொரோனாவுக்கு பின் பல தாக்கம் ஏற்பட்டிருக்கும்.சொல்லப்போனால் கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றித் திரிந்தது போல் தற்போது சுற்ற முடியவில்லை. கொரோனாவிற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் தெரியாது. அதற்கு எல்லோரும் சமம்தான்.
அதனால்தான் எல்லாரையும் தாக்கி வருகிறது. ஆகையால் விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் செல்லாது சிலர் வீட்டில் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் படப்பிடிப்பிற்காக செல்ல வேண்டியிருக்கிறது.
அப்படி செல்லும்போது ஏதோ ஒரு பயம் எங்கள் பின்னால் வருவது போல் இருக்கிறது. முன்பு இருந்தது போல் சுற்ற முடியவில்லை. இதேபோல் படப்பிடிப்பிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த வேதனை எனக்கு இருக்கிறது. மேலும் முகக்கவசம் அணியாத வாழ்க்கை எப்போது வரும் என்ற ஏக்கமும் உள்ளது என்று கூறியுள்ளார்.