கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்
கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்யாவசிய ஊழியர்களுக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 1,35,963 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹெல்த்கேர் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட் “பிரதமரின் அறிவிப்பு கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதை ஊழியர்கள் பார்க்க விரும்புகிறார்கள். கொரோனா பிரச்சினையால் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் மரணமடைந்து விட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது பிரச்சினையாக இருந்து வருகின்றது என தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிமுகம் செய்த ஜஸ்டின் ட்ரூடோவின் உத்தரவு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது.
இதனிடையே கனடாவில் 67,702 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாண்ட்ரீல் தீவு கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்ந்து வருகின்றது. 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கியூபெக் மாகாணத்தில் வணிகத்தை திறப்பது குறித்து அம்மாகானத்தின் ஆளுநர் முடிவு செய்தது நாட்டையே பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.