Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் நாட்டிற்குள் நுழைய தடை…. கனடா அரசாங்கம் அறிவிப்பு…!!!

கனடா அரசாங்கம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினையும், அந்நாட்டு ராணுவத்தினர் 1000 பேரையும் தங்கள் நாட்டுக்குள் வர தடை அறிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. கனடா நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் அவரின் அரசாங்கம், ராணுவத்தில் இருக்கும் ஆயிரம் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இது பற்றி கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரான மார்க்கோ மென்டிசினோ தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் நெருக்கமான கூட்டாளிகளும், முக்கிய ஆதரவாளர்களும் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பது, ரஷ்ய நாட்டை அதன் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க செய்யும் பல்வேறு வழிகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |