கனடாவைச் சேர்ந்த ஒரு குழந்தை இந்தியா சென்றிருக்கும் தன் அப்பா விரைவில் நாடு திரும்ப தினமும் பிரார்த்தனை செய்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கல்கரியில் வசிக்கும் Divesh, என்பவர் அவசர பணிக்காக, கடந்த ஏப்ரல் மாதத்தில் புது டெல்லி சென்றிருக்கிறார். அவரால், தற்போது வரை கனடாவிற்கு திரும்ப முடியவில்லை. ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று இந்திய நாட்டிலிருந்து கனடா செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. தற்போது இத்தடை ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே Divesh, கனடா வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் கனடா நாட்டில் அவரின் மனைவி Suruchi, ஒரே ஆளாக அலுவலகப் பணிகளையும், பிள்ளைகளை கவனிப்பதும், வீட்டு வேலைகளையும், உடல் நலமற்ற தாயையும் கணவர் இன்றி தனியாக பார்க்க மிகவும் சிரமப்படுவதாக கூறியுள்ளார். மேலும் அவர், மனம் மற்றும் உடல் ரீதியாக கஷ்டங்கள் ஏற்படுவதாகவும், பண பற்றாக்குறையும் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், தன் கடைசி மகள் தினமும் தந்தையின் புகைப்படத்திற்கு அருகில் நின்று “கடவுளே, என் தந்தையை விரைவில் வீட்டுக்குக் கொண்டு வந்து விடு!” என்று கூறுவதை பார்க்கும் போது, வேதனையளிப்பதாக கூறுகிறார். மேலும் கனடா அரசு நாட்டு மக்களை வரவழைப்பதில் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.