சீனர் ஒருவரை கனடிய பெண் கடுமையாக பேசி இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது
கனடாவில் சீனாவிற்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வான்கூவரில் இருக்கும் கடை ஒன்றில் சீனர் ஒருவர் நின்றிருந்தார். அவரைப் பார்த்த கனடிய பெண்ணொருவர் தள்ளி போ, வூஹானுக்கு திரும்பி போ, எனக்கு கொரோனாவை தந்து விடாதே என மக்கள் முன்னிலையிலேயே சத்தமிட்டு உள்ளார். இதனால் சீனாவை சேர்ந்தவர் கூனிக்குறுகி போயிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த 2015 தேர்தலில் நின்ற கனடிய பெண் மீரா கர்ப்பிணியாக இருந்தும் எதைக் குறித்தும் கவலைப்படாமல் அந்த சீனருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அந்தப் பெண் பேசிய வார்த்தைகள் மிகவும் கூர்மையாக இருந்தது எனக் கூறும் மீரா அவ்வார்த்தைகள் என்னை நோக்கிக் கூறப் படவில்லை என்றாலும் அது உண்டாக்கிய வலியை என்னால் உணர முடிந்தது என கூறுகிறார்.
I just witnessed a blatantly #racist attack towards a Chinese man while in a line-up outside the Hardware store on Commercial Drive. A woman yelled at a man to go back to Wuhan and get away from her. #covid19 ##hate #bcpoli
— Mira Oreck (@miraoreck) May 14, 2020
உங்கள் வார்த்தைகள் வெறுப்பை வெளிப்படுத்துகின்றன இது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் அந்த பெண்ணிடம் மீரா எடுத்துரைக்க ஆனால் அந்தப் பெண்ணோ எனக்குத் தெரிந்த பலரே கொரோனாவால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தொடங்கி மீண்டும் சீனரை குறிவைத்து தாக்கி இருக்கிறார். அங்கிருந்த வேறு யாரும் எதுவும் பேசவில்லை.
அந்த மக்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானோர் தங்களுக்கென்று ஆதரவாக சிலர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார். கொரோனாவிற்கு பின்னர் இது கனடாவில் நடக்கும் முதல் இனவெறி தாக்குதல் அல்ல முகத்தில் குத்தப்பட்ட சீன இளம்பெண் முதல் 92 வயது முதியவர் வரை வான்கூவரில் மட்டும் 20 இனவெறித் தாக்குதல்கள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.