புலம்பெயர்ந்த மக்கள் தொடங்கி சர்வதேச மாணவர்கள் வரைக்கும் பிற நாட்டவர்களை ஈர்ப்பதில் கனடா முதலிடத்தில் இருக்கிறது.
Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசை பட்டியலில் முதல் தடவையாக கனடா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. The Nation Brands Index என்ற அமைப்பானது, உலக நாடுகளின் நற்பெயரை மதிப்பிட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 60,000 நேர்காணல்களிலிருந்து 60 நாடுகளை மதிப்பிட்டிருக்கிறது.
ஏற்றுமதி, கலாச்சாரம், நாட்டு மக்கள், சுற்றுலா, மூலதனம், புலம்பெயர்தல் மற்றும் ஆட்சி முறை போன்ற காரணங்களை கொண்டு தரவரிசைப்படுத்தப்பட்டது. இதில், கனடா, புலம்பெயர்தல் மற்றும் மூலதனத்தில் முதலிடம் பிடித்திருக்கிறது. இது வெளிநாட்டு ஊழியர்கள், புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் நாட்டின் திறன் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஒரு நாட்டினுடைய தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றை கொண்டும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் கனடா, ஆட்சி முறையிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று இருக்கிறது. மேலும், நாட்டு மக்களின் நட்பு, சகிப்புதன்மை, சிறந்த மனப்பான்மை போன்றவற்றிலும் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கிறது. ஏற்றுமதி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா போன்றவற்றில் சீரான மதிப்பெண்களை பெற்றிருக்கிறது.
இதன்படி, கடத்த வருடத்தில் 2-ஆம் இடம் பெற்றிருந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, கனடா இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது.