கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் பத்து நாட்கள் வாகனங்களில் ஹாரன் ஒலியை பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்களும் தடுப்பூசியை எதிர்க்கும் மக்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, ஒட்டாவாவின் நகர மேயர் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இந்நிலையில் வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களில் ஹாரன் ஓலியை ஏற்படுத்தி வித்தியாசமான முறையில் நூதனமாக போராட்டம் நடத்தியுள்ளனர். அடுத்த பத்து தினங்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிப்பதற்கு தடை அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.