கனடாவில் தலைநகர், உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்கள் தங்கள் நாட்டில் 3 வருடங்கள் தங்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து, அந்நாட்டின் பல நகர்களை நிலைகுலைய செய்திருக்கின்றன. எனவே, மக்கள் பள்ளிகள், திரையரங்குகள் சமூக மையங்களில் பதுங்கியுள்ளனர். மேலும், தங்களை காத்துக்கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
தற்போதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். இந்நிலையில், கனடாவில் தலைநகர் ஒட்டாவா, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள், தங்கள் நாட்டில் 3 வருடங்கள் தங்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இது பற்றி வெளியான அறிவிப்பில், ரஷ்ய தாக்குதலிலிருந்து வெளியேறும் உக்ரைன் மக்கள் மற்றும் அவர்ளின் குடும்பத்தினர், கனடாவில் 3 வருடங்கள் வரை தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்காக, இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தங்கள் பயோமெட்ரிக் தரவுகளை கைரேகைகள், புகைப்படத்தின் வடிவில் கொடுக்க வேண்டும். கல்வி மற்றும் பணி பெற ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.