கனடா அரசு, தங்கள் நாட்டில் வசிக்கும் இரண்டு இந்தியர்களுக்கு உயரிய கவுரவ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.
கனடாவில் வசிக்கும் இந்தியர்களான பர்மிந்தர் ரெய்னா, அஜய் அகர்வால் ஆகிய இருவருக்கு Order of Canada என்ற உயரிய கௌரவ விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை 1967 ஆம் வருடத்தில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உருவாக்கினார்.
இந்த உயரிய கௌரவ விருதானது, சமுதாயத்திற்கான சேவைகள் மற்றும் கற்பனைகளை உண்மையாக்கும் கண்டுபிடிப்புகள், சமூகத்தை ஒன்றிணைக்கும் இரக்கம் உடையவர்களை பெருமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அஜய் அகர்வால், தொழிலதிபர் மற்றும் கல்வி கற்பிப்பாளராக இருக்கிறார். மேலும் தொலைநோக்கு பார்வையுடைய தலைமைத்துவத்தை கொண்டிருப்பதாலும், இளைஞர்களுக்கும் தொழில் செய்ய விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டதற்காகவும் பெற்றிருக்கிறார்.
பர்மிந்தர் ரெய்னாவிற்கு, வயதானவர்கள் மற்றும் மக்களின் உடல் நலம் போன்றவை குறித்து செய்த ஆய்வு, வயதானவர்களின் நலனுக்காக ஆற்றும் சேவைகளில் தாக்கத்தை உண்டாக்கியதற்காகவும் வழங்கப்பட்டிருக்கிறது