கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்ப்படுத்துகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கனடா மற்றும் இந்தியா இடையேயான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சர்வதேச போக்குவரத்து தடையானது மீண்டும் 5 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா போன்று தெற்காசிய நாடுகளிலிலிருந்து விமான சேவைகள் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸ், புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிப்படைகின்றனர். இதனால் கனடாவில் ஐந்தாம் கட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு முன்பாகவே ஆகஸ்ட் 21-ஆம் தேதி கனடா மற்றும் இந்தியா இடையான விமான போக்குவரத்தை மீண்டும் துவக்க இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியுகியுள்ளது.