கனடா நாட்டில் இந்திய வம்சாவளியினர் 3 பேருக்கு நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தேசிய விருது கிடைக்கவிருக்கிறது.
இந்திய வம்சாவளியினரான வைகுண்டம் ஐயர் லக்ஷ்மணன் என்ற விஞ்ஞானி, பாப் சிங் தில்லான் என்ற தொழிலதிபர் மற்றும் பிரதீப் மெர்ச்சண்ட் ஆகிய மூவரும், “ஆர்டர் ஆப் கனடா” என்ற அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தேசிய விருதுக்கு தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான விருதுக்கு சுமார் 135 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில், இவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அதாவது அவரவர் துறையில், அவர்கள் செய்த கடின உழைப்பு, சாதனைகள், நாட்டு முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்கு, இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையில் பாலமாக செயல்பட்டது போன்றவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருது கிடைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.