கனடாவின் பிரதமரான, ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து அதிகமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், அதனையெல்லாம் அமைதியாக எதிர்கொண்ட பிரதமரை ஆத்திரமடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூட்டோ, நடைமுறைப்படுத்திய கொரோனா விதிமுறைகளை எதிர்த்து மக்கள் போராடி வருவது, அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும், குறிப்பாக பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களுக்கெல்லாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், பிரதமரை எதிர்க்கும் மக்கள் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு மோசமான வார்த்தைகளால் சத்தமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் பிரதமர் இது குறித்து தான் வருத்தப்படப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்த பிரதமரை பார்த்து, திடீரென்று ஒரு நபர் மோசமான வார்த்தைகளால் திட்ட தொடங்கினார். எனினும் பிரதமர் அமைதியாக இருந்துள்ளார். அதன்பின்பு, அந்த நபர் பிரதமரின் மனைவி குறித்து ஆபாசமாக பேசியிருக்கிறார்.
இதனை, பொறுத்துக்கொள்ள முடியாத பிரதமர் கோபமாக எழுந்து, அந்த நபரை பார்த்து, ஏதேனும் மருத்துவமனைக்கு முன் நின்று தானே கத்துவீர்கள்! அருகில் மருத்துவமனை இல்லையா? என்று கூறியிருக்கிறார். அதாவது, போராட்டக்காரர்கள் மருத்துவமனை முன்பு நின்று தான் போராடுகிறார்கள். அந்த அர்த்தத்தில் தான் பிரதமர் கூறியிருக்கிறார். அதன்பின்பு அவர் பேசியதாவது, “என்னைப்பற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள முடியும். என் குடும்பத்தாரை பற்றி பேசுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது” என்று கூறியிருக்கிறார்.