Categories
உலக செய்திகள்

ஓட்டப்பந்தயத்தில் கடைசி இடம்….. கனடா வீராங்கனையின் விடாமுயற்சி….. ஆதரவு தெரிவிக்கும் மக்கள்….!!

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் இறுதியாக வந்த கனடா வீராங்கனைக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்த ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டப்பந்தயமும் முக்கியமான விளையாட்டாகும். இதில் கலந்து கொள்வதற்காக Dayna Pidhoresky என்ற கனடா வீராங்கனை டோக்கியோவிற்கு விமானத்தில் வந்துள்ளார். அப்பொழுது அவரின் அருகில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் Dayna  ஜப்பானில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை உருவானது. இதனால் அவர் ஓட்டப் பந்தயத்திற்கு பயிற்சி எடுக்க முடியாமல் போனது. இருப்பினும் Dayna Pidhoresky ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு கடைசியாக 73 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் எப்படிப்பட்ட சூழலிலும் மனம் தளராமல் போட்டியில் பங்கெடுத்த Dayna Pidhoreskyக்கு  சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து Dayna Pidhoresky கூறியதில் “என் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து எனக்கு மெய்சிலிர்க்கிறது. மேலும் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து மக்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அதிலும் Dayna Pidhoresky கடந்த 2019 ஆம் ஆண்டில் ரொரன்றோ Waterfront மாரத்தான் பந்தயத்தில் 2:29:03 என்ற குறுகிய நேரத்தில் பந்தய தூரத்தை கடந்த வேகமான பெண் என்ற சாதனையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |