Categories
உலக செய்திகள்

மனைவிக்கு கொரோனா… வீட்டிலிருந்து அலுவல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்த கனடா பிரதமர்!

தனது மனைவி சோபியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவல் பணிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரிகோரி (Sophie Grégoire) சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

Image result for Sophie Grégoire Trudeau

இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலம் பெற்று வருவதாகவும், குறிப்பிட்ட காலம் வரை தனிமை வார்டில் இருப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Image result for Sophie Grégoire Trudeau

இந்நிலையில் மனைவி சோபியாவுக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரும் வரை, அலுவல் பணிகளை
ஜஸ்டின் ட்ரூடோ செல்போன் அழைப்புகள் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலம் வீட்டிலிருந்தே செய்ய முடிவு செய்துள்ளார். கொரோனா முன் எச்சரிக்கையாக  அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

 

 

Categories

Tech |