கனடா நாட்டில் கடுமையான புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கனடா நாட்டின் தலைநகரான Ottawa பகுதியை கடுமையான புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நேற்றிரவு கனடா நாட்டின் உள்ளூர் நேரமான 8.15 மணிக்கு தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் பலத்த காற்று மட்டும் பனிக்கட்டி போன்ற கல் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலால் Ottawa, Gloucester, Orléans, Nepean Bay, Hull, Dows Lake, McKay Lake, Vanier, Vars, Sarsfield மற்றும் Hammond போன்ற பகுதிகள் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.