பனியில் முகம் கவிழ்ந்து உறைந்த நிலையில் இருந்து போலீசார் ஒரு ஆண் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் கால்கரிக்கு சற்று தூரத்தில் Airdrie என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Kalix Langenau என்ற 19 வயதான இளைஞர் பணியில் முகம் கவிழ்ந்து உறைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் இருந்துள்ளது. இவரை Hunter Van Mackelberg என்ற வாலிபன் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இது ஒரு சிக்கல் வாய்ந்த வழக்காகும். ஏனெனில் Hunter என்பவர் Sadie Boyle என்ற பெண்ணை விரும்பியுள்ளார். இதனை போன்றே Kalixம் Madeline Kot என்ற பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இரு ஜோடிகளும் பிரிந்துள்ளார்கள். இதன் பிறகு Hunter Madelineயும் Kalix Sadieயும் காதலிக்க ஆரம்பித்து இணைந்து வாழத் தொடங்கியுள்ளனர்.
இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இரு ஆண்களும் தங்கள் காதலிகள் மூலமாக தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் Kalixன் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை Hunter தான் செய்தார் என நினைத்து அவருக்காக பயந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு Kalix தப்பிச் சென்றுள்ளார். மேலும் அங்கே பணிபுரிந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து Kalix தனது 2வது காதலியான Sadieயையும் பிரிந்துள்ளார்.
அவரின் இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தது. ஆனால் Madeline Kot சந்தோசமாக Hunter உடன் இணைந்து வாழ்ந்து வந்தார். மேலும் Kalixயை பிரிந்த Sadieயும் Dylan என்பவரை விரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் Hunter உடன் வாழ்நது வந்த தனது முதல் காதலியான Madelineக்கு Kalix தொலைபேசி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த Hunter Madelineஐ பின்தொடர்ந்து இருவரையும் கையும் காலுமாக பிடித்துள்ளார். அப்போது தான் Hunter Kalixஐ சுட்டுக்கொன்றுள்ளார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை நீதிபதி நம்ப மறுத்துவிட்டார். மேலும் ஏற்கனவே Kalixயின் இரண்டாவது காதலியான Sadieயின் தற்போதைய காதலனான Dylanக்கும் அவருக்கும் கூட பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
ஏனெனில் Kalix பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து திரும்பி மீண்டும் கால்கரிக்கு வந்தவுடன் Sadie தான் அவரை விமான நிலையம் சென்று அழைத்து வந்துள்ளார். இதனால் Sadieயின் தற்போதைய காதலன் Dylan Kalix மீது கோபமாக இருந்துள்ளார். ஆகையால் அவர் கூட Kalixஐ கொன்றிருக்கலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இறுதியாக இந்த கொலை வழக்கில் குழப்பம் நீடிப்பதால் மூன்று வாரத்திற்கு விசாரணை மேற்கொண்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.