கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் 17 வயது மாணவியை 19 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
முன்பெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் அது வகுப்பறையிலேயே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. ஒருவர் மற்றொருவரை இணையம் மூலமாக மிரட்டுவது, வீட்டைவிட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற கொடூர செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கனடாவில் உள்ள Christ The King Schoolஎன்ற பள்ளியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அப்பள்ளியில் Jennifer Winkler என்ற 17 வயது மாணவி படித்து வந்தார். அந்த மாணவியை அப்பள்ளியில் பயிலும் Dylan Poutney என்ற 19 வயது மாணவர் வகுப்பறையிலேயே கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த Jennifer ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் காயம் பலமாக இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை செய்துவிட்டு பள்ளியில் இருந்து தப்பி ஓடிய Dylan அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்துள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் அந்த மாணவரை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் தான் என்று விசரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை? ஏன் Jennifer-ஐ Dylan வகுப்பறையில் வைத்து குத்தினார் என்ற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் காவல்துறையினர் Dylan-டம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்