நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி வாகையை சூடியுள்ளனர்.
கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிலும் லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 149 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது லிபரல் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போழுதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளார். இந்த நிலையில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
Canada's PM Justin Trudeau’s Liberal Party has won a minority gov't after a close election battle against the opposition Conservatives.
Trudeau had called the snap election to try to win a majority in Parliament. Read more: https://t.co/PbmRwpBbem pic.twitter.com/43iJIbBzoD
— Al Jazeera English (@AJEnglish) September 21, 2021
அதில் பெரும்பாலும் போட்டியிட இந்தியா வேட்பாளர்கள் வெற்றி வாகையை சூடியுள்ளனர். குறிப்பாக Oakville தொகுதியில் கெரி கொல்போர்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ஆனந்த் மீண்டும் வெற்றியை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து வாட்டர்லூ தொகுதியில் நின்ற Bardish Chagger வெற்றி வாகை சூடியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சராக இருந்த Harjit Sajjan வான்கூவரின் தெற்கு பகுதியில் வெற்றி கனியை எட்டியுள்ளார். இதனை போன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் பர்னாபி தெற்குப் பகுதியில் போட்டியிட்ட Jagmeet Singh வெற்றி பெற்றுள்ளார்.
இவரின் புதிய ஜனநாயக கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் 22 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த கட்சி ஏற்கனவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர்த்து Randeep Sarai, Maninder Sidhu, Ruby Sahota, Kamal Khera, Sonia Sidhu, Iqwinder Gaheer போன்ற 17 இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி கனியை எட்டியுள்ளனர். இருப்பினும் Sonia Andhi, Naval Bajaj, Manjeet Singh, Medha Joshi, Ramandeep Brar, Tejinder Singh, ukhbir Singh Gill போன்றோர் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.